விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

பிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை இதனால் இந்த தொடர் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் பேசிய இந்த தொடரின் நாயகி மோனிஷா,இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக கைவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இதற்கு காரணாம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அனைவரும் கேரளா,பெங்களூர்,ஹைதெராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருப்பதாகவும் அவர்களை ஒருங்கிணைத்து நடத்துவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் நாயகி மோனிஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் பூரண குணமடைந்தார்.தற்போது தமிழில் பட்டையை கிளப்பி வந்த இந்த சீரியல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து இந்த தொடரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)