விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரின் இரண்டவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மிர்ச்சி செந்தில் இந்த தொடரில் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

சபிதா,ப்ரேமி வெங்கட்,காயத்ரி யுவராஜ்,ஜனனி அசோக்குமார்,வைஷ்ணவி,ராஜு ஜெயமோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 300 எபிசோடுகளை கடந்துள்ளது.

ரச்சிதா இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார்.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக ரச்சிதா தெரிவித்தார்.திடீரென இவர் தொடரில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.அடுத்து இவருக்கு பதிலாக யார் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ரச்சிதா நடித்த மகா என்ற கதாபாத்திரத்தில் தற்போது அரண்மனை கிளி தொடரில் நடித்து பிரபலமான மோனிஷா நடிக்கிறார் என்றும் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.இதனை உறுதி செய்யும் விதத்தில் மோனிஷாவும் அந்த சீரியல் எடுக்கப்படும் வீட்டில் இருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aranmanai kili monisha said to replace rachitha in naam iruvar namaku iruvar