விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

பிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை.சில காரணங்களால் இந்த தொடர் கைவிடப்பட்டது என்ற தகவல் வெளியானது.இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.இருந்தாலும் இந்த தொடரின் நட்சத்திரங்கள் புதிய தொடருடன் சந்திப்பதாக ரசிகர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

இந்த தொடரின் நாயகி மோனிஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் பூரண குணமடைந்தார்.அவ்வப்போது தனது நடன வீடியோக்களை ரசிகர்களுடன் பதிவிட்டு மகிழ்ந்து வந்தார் மோனிஷா.தான் wine குடிக்கும் வீடியோ ஒன்றை ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்துள்ளார் மோனிஷா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.