தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி.தனது ஜாலியான படங்கள் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார் சுந்தர் சி.இவரது இயக்கத்தில் 2014-ல் வெளியான ஹாரர் காமெடி படமான அரண்மனை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது.

2016-ல் வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மூன்றாம் பாகத்தினை படக்குழுவினர் தற்போது தயார் செய்துள்ளனர்.அவ்னி சினிமாஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.சுந்தர் சி இந்த படத்தினையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.சுந்தர் சி,ராஷி கண்ணா,ஆண்ட்ரியா,சாக்ஷி அகர்வால்,யோகி பாபு,விவேக் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.சத்யா சி இசையில் இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகியுள்ளது.தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றும் வகையில் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்