மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்து தென்னிந்திய அளவில் மெகா ஹிட்டான படம் பிரேமம். நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த கொடி திரைப்படத்திலும் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . 
 
தமிழ் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்த தள்ளிப்போகாதே மற்றும் தெலுங்கில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 18 பேஜஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சண்டூ மண்டேட்டி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது இத்திரைப்படத்திலும் நடிகர் நிகில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார் இதில் கதாநாயகியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டனர் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.