சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடித்த Ante Sundaraniki படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை அடுத்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தினை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.இந்த படத்திற்கு தசரா என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான Ante Sundaraniki படத்தை Mental Madhilo,Brochevarevarura உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.இந்த படத்தின் நஸ்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார்.இது இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.விவேக் சாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.

இந்த படம் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்