சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும்,விமர்சகர்கள் மத்தியிலும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படம் பொங்கல் 2021-க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.ஷூட்டிங் தொடங்கிய பின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான அன்று ஒரு வீடியோ மூலம் வெளியிட்டனர் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.இமானின் தரமான தீம் மியூஸிக்குடன் வரும் இந்த டைட்டில் மோஷன் போஸ்டர் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.