இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் மூலமாக முதல்முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குகிறார் இயக்குனர் சிவா.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப்,சூரி,சதீஷ், ஜெகபதிபாபு, பாலா, கருணாகரன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & டீஸருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒளிப்பதிவாளர் வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.