எல்லை மீறிய நெட்டிசன்....செம கடுப்பான பிரபல தொகுப்பாளினி !
By Aravind Selvam | Galatta | September 22, 2021 16:34 PM IST

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.
டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.
அஞ்சனா எப்போதும் தனது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருப்பவர்.இவரது புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று,லைக்குகளை அள்ளும்.சமூகவலைத்தளங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்கள்,திட்டுக்கள் போன்றவற்றை பகிர்ந்து வருவார்கள்.இவற்றில் சிலர் வரம்பு மீறுவது தொடர்ந்து கொண்டே வருகிறது.
அப்படி அஞ்சனாவிடம் சிலர் எல்லைமீறி மெசேஜ் செய்வார்கள் அவர்கள் குறித்தும் அவ்வப்போது பகிர்ந்துவருவார்.அப்படிச்செய்