தமிழ் திரையுலகில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்ளின் மனதில் இடம்பெற்றவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், தூங்காநகரம், கலகலப்பு என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் நடித்திருந்தார் அஞ்சலி. மாதவன் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்த நிசப்தம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார். 

தற்போது கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஞ்சலி. கோலி சோடா மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

கடுகு ரீமேக்காக இப்படம் உருவாகிறது. கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் கோலிசோடா, கடுகு போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் ,  கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்கன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. 

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குனராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல்  படப்பிடிப்பு பெங்களூரில் சான்ஸ்க்ரிட் கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

கவுதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒரு வெப்சீரிஸின் 4 பகுதிகளை தனித்தனியே இயக்க உள்ளனர். இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் அஞ்சலி நடிக்கிறார். 

நடிகை அஞ்சலி மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் பூச்சாண்டி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார். அர்வி - மருதநாயகம் இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். சுரேஷ் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.