தென்னிந்திய திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை அஞ்சலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மச்செரெல நியோஜகவர்கம் தெலுங்கு படத்தில் “ரா ரா ரெட்டி” எனும் பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.

தொடர்ந்து வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி நடிப்பில் உருவான ஜான்சி வெப் சீரிஸ் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்த புதிய வெப்சீரிஸான FALL வரும் டிசம்பர்9-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் அஞ்சலியுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், பூர்ணிமா பாக்யராஜ், SP.சரண், நமிதா கிருஷ்ணமூர்த்தி, சோனியா அகர்வால், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள FALL வெப் சீரிஸுக்கு இயக்குனர் சித்தார்த் ராமசாமியை ஒளிப்பதிவு செய்ய கிஷான்.C.செழியன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்தும் FALL வெப் சீரிஸ் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது அல்லது லிப் லாக் எது மிகவும் கடினமானது..? என கேள்வி கேட்டபோது நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தான் என பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய போது, “ஏனென்றால் நெருக்கமான காட்சிகள் என்றால் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் எந்த ஒரு கட்டத்திற்கும் போகலாம் ஆனால் எந்த கட்டம் வரை நான் கம்ஃபர்டபுலாக இருப்பேன் என எனக்கு தெரியாது. சில சூழ்நிலைகளில் நான் கேரவனுக்கு சென்று அழுத நாட்கள் கூட உள்ளது. ஆனால் லிப் லாக் என்றால் இதற்கு மேல் போக மாட்டார்கள் என ஒரு அளவு இருக்கும். நமக்கு பிடிக்காத ஒரு நபர் நம்மை தொடுவதை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் அத்தனை நபர்களுக்கு முன்னால் குறைந்த அளவு பட குழுவுடன் என்றாலும் 15 பேராவது இருப்பார்கள். அத்தனை பேருக்கும் நடுவில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது, அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர்! அந்த நடிகரை அதற்கு முன்பு நாம் நண்பராக மட்டுமே பார்த்திருப்போம் அவருடன் அப்படி இணைந்து நடிப்பது அவ்வளவு எளிதல்ல எனவே நான் லிப் லாக்கை தேர்ந்தெடுப்பேன்” என அஞ்சலி பதில் அளித்துள்ளார். அஞ்சலியின் அந்த முழு வீடியோ இதோ…