தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் தளபதி விஜய்.தனது 65-ஆவது படத்தில் நடித்து வரும் இவர் 20 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார் விஜய்.

தமிழ் மட்டுமின்றி உலகமெங்கும் பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளவராக விஜய் வளர்த்துள்ளார்.உலகமெங்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது திரைப்பட ரிலீஸ் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்படும்.பட ரிலீஸ் மட்டுமின்றி இவரது பிறந்தநாள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை கோலாகலமாக பலவகையில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இன்று விஜய் தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்து வந்த வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.

விஜயுடன் கத்தி,மாஸ்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனிருத் தற்போது விஜய்க்கு பீஸ்ட் படத்தின் பாடல் ஒன்றினை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவில் உடன் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் பாடகர் Bjorn Surrao இருந்தனர்.தளபதி விஜய் பிறந்தநாளுக்கு அனிருத் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.