தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அசத்தி வருபவர் அனிருத் ரவிச்சந்தர்.2012-ல் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் அடுத்து தொட்டதெல்லாம் ஹிட் தான்.இவர் அடுத்தடுத்து இசையமைத்த படங்கள் ஹிட் அடிக்க முன்னணி இசையமைப்பாளராக அவதரித்தார்.

பல ஹிட் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.ரஜினி,கமல்,விஜய்,அஜித்,தனுஷ்,சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி என தமிழின் முன்னணி நாயகர்களுக்கு தனது இசையால் சூப்பர்ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார் அனிருத்.

தெலுங்கிலும் பவன் கல்யாணின் Agnyaathavaasi படம் மூலம் என்ட்ரி கொடுத்தார் அனிருத்,அதற்கு அடுத்து நானியின் ஜெர்சி,கேங் லீடர் படங்களுக்கு இசையமைத்தார் தெலுங்கிலும் பாடல்கள் செம ஹிட் அடித்தன.அடுத்ததாக இவர் இசையமைத்த பல முக்கிய படங்கள் வெளிவரவுள்ளன.தற்போது இவர் இசையமைக்கும் புது படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகும் NTR 30 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.படத்தின் மோஷன் போஸ்டருடன் அனிருத் BGM இருக்கும் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.