சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ஈர்க்கும் இசையமைப்பாளர் அனிருத்தின் பதிவு !
By Sakthi Priyan | Galatta | September 12, 2020 12:53 PM IST
திரையுலக ரசிகர்களின் ஃபேவரைட்டான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். பாடல்களில் கேமியோ, கான்செர்ட் மேடைகளில் நடனம் என ஜொலித்து கொண்டிருப்பதால் ராக்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் அறிமுகமானவர், இன்று பிஸியான இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் பேட்ட படத்தில் பின்னணி இசையை கொண்டு இருந்தது. இதை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தோனி ரசிகர்கள். அபுதாபியில் நடக்கவிருக்கும் ஐபில் போட்டிகளுக்கு தயாராகிவருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தர்பார் படத்திற்கு பிறகு அனிருத் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத். சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். ப்ரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். செல்லம்மா பாடல் வெளியாகி சாதனை ஓட்டம் செய்தது.
அநேகமாக இந்த ஊரடங்கிலேயே இந்தியன் 2 பாடல் கம்போசிங்கிற்கும் ரெடியாகியிருப்பார் அனிருத் என்றும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதன் மீதம் உள்ள படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வருகிறது.
முதல் முறையாக சியான் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை என்ற ருசிகர தகவலும் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் சியான் 60 திரைப்படம் தான் அது. இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. பேட்ட படத்திற்கு பிறகு அனிருத்துடன் கார்த்திக் சுப்பராஜ் இணைவதால் இந்த படத்தின் ஆல்பமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.
Gautham Karthik's interest to work with GVM - Watch new video here!
12/09/2020 01:15 PM
Rakul Preet Singh's name dragged into the drug case - Shocking Reports!
12/09/2020 11:20 AM
Thalapathy Vijay film's new trailer - special treat for fans!
12/09/2020 10:16 AM
MGR's nephew M. G. C. Chandran passes away due to coronavirus
11/09/2020 05:51 PM