இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயின் மாஸ்டர்,நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர்,ஷங்கர் இயக்கத்தில் கமலின் இந்தியன் 2,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ள சீயான் 60 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப்,டிக்டாக் என்று அனைத்து சமூகவலைத்தளங்களில் ஹிட் அடித்தது.

கொரோனா காரணமாக அனிருத் அவ்வப்போது தனது மியூசிக் விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தனது யூடர்ன் படத்திலிருந்து கர்மா தீம் பாடலை மக்களின் மனவலிமைக்காக ஒரு பாடலை வெளியிட்டார்.கொரோனா போராளிகள்,கொரோனா நேரத்தில் வேலை பார்ப்பவர்கள்,கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பித்தார் அனிருத்.இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அனிருத் சமீபத்தில் பியானோ சீரிஸ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார்.முதலில் தனது படங்களில் உள்ள ஹிட் பாடல்களை பாடி வாசித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த அனிருத்.அடுத்ததாக ஹிந்தி,இங்கிலிஷ் மொழிகளில் தனது ஃபேவரைட் பாடல்களை வாசித்து தனது குரலில் பாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார் அனிருத்.மேலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளித்து வந்தார் அனிருத்.யூடியூப் லைவ்,இன்ஸ்டாகிராம் லைவ் என்று தன்னால் முடிந்தளவு நேரத்தை தனது ரசிகர்களுடன் செலவிட்டு வந்தார் அனிருத்.

சிவகார்திகேயன் நடிப்பில் இவரது இசையில் டாக்டர் படத்தில் இருந்து செல்லம்மா பாடல் ரிலீசாகி ரசிகர்களிடம் வைரல் ஹிட் அடித்தது.தற்போது அனிருத்தின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பேட்ட,தர்பார் உள்ளிட்ட படங்களில் சூப்பர்ஸ்டாருக்கு செம மாஸாக பாடல்கள் போட்டு பட்டையை கிளப்பிய அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அவரது சூப்பர்ஹிட் படமொன்றில் நடித்துள்ளார்.பாபா படத்தின் டிப்பு கும்மரே பாடலில் குழந்தை நட்சத்திரமாக அனிருத் நடித்துள்ளார் , இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்