தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.நடிகையாக பல படங்களில் முத்திரை பதித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார் நயன்தாரா.ஹீரோக்களுக்கு நிகராக மாஸான பல கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.ரசிகர்கள் இவரை செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைப்பார்கள்.

விஸ்வாசம்,பிகில்,தர்பார் என்று டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் கலக்குவார்.அறம்,இமைக்கா நொடிகள்,கோலமாவு கோகிலா என்று தனியாக கலக்குவார் நயன்தாரா.நயன்தாராவின் இடத்தை மற்ற நடிகைகள் பிடிப்பது கடினம் தான் என்றாலும்.அவரை போல நடிப்பது,அவரின் லுக்குகளை கொண்டுவர முயற்சிப்பது என்று பலரும் ட்ரை செய்து வந்தனர்.

பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் நயன்தாரா ஒரு ரோல் மாடலாக விளங்குகிறார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.இந்நிலையில் தற்போது அனிகாவின் புகைப்படங்கள் சில வெளியாகி அதனை ரசிகர்கள் நயன்தாராவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

நானும் ரௌடி தான்,விஸ்வாசம்,மிருதன்,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அனிகா.விஸ்வாசம்,பாஸ்கர் the ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா.நானும் ரௌடி தான் படத்தில் குட்டி நயன்தாராவாக அசத்தியிருப்பார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அனிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.சமீபகாலமாக இவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் அதனை நயன்தாராவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.நெட்டிசன்கள் பலர் பல மீம்களையும் ஷேர் செய்து வந்தனர்.சமீபத்தில் இவர் பகிர்ந்த புகைப்படம் செம வைரலாக இது நயன்தாராவின் சின்ன வயசு போட்டோவா என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் நயன்தாரா பற்றிய சுயசரிதை எடுத்தால் அதற்கு இவர் சரியாக இருப்பார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

anikha surendran new photoshoot pictures resembling nayanthara