தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பேபி அனிகா. நடிகை ஷாலினி, மீனா இவர்களுக்கு பிறகு திரை ரசிகர்களால் விரும்பப்படும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் கெளதம் மேனன் இயக்கிய என்னைஅறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். 

இப்படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. இந்த படத்தில் பேபி அனிகாவின் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கும். 

அனிகாவை தமிழ் சினிமா ரசிகர்கள் தல அஜித்தின் மகளாகவே பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் இவர் ஒவ்வொரு முறையும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் போது இதெல்லாம் வேணாம் பாப்பா என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உடம்பில் வாழை இலையை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வேண்டாம் அனிகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் வெப்சீரிஸிலும் அனிகா நடித்திருந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு அந்த வெப் சீரிஸ் உருவானது. இதில் சிறு வயது ரோலில் நடித்திருந்தார். டீனேஜிலே ஹீரோயின் வாய்ப்பை நிச்சயம் அனிகா பெறுவார் என்று கமெண்ட் செய்து இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

தற்போது அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க முயற்சித்து வருவதாகவும் மலையாளத் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் தமிழ் படத்திலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.