தமிழ் திரையுலகை பொறுத்த வரை ஒரே சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமைரா தஸ்தூரும் ஒருவர். வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இஷாக் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

ஆனால் அதன்பிறகு தமிழில் எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார். உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுடன் ஒரு படத்தில் நடித்து அசத்தினார். 

பிரபுதேவா நடிக்கும் பஹீரா என்ற படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பிகினி உடைகளில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.