தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா, இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் விரைவில் சோனி லைவ் தளத்தில் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளது. தொடர்ந்து மாளிகை, நோ என்ட்ரி மற்றும் கா உள்ளிட்ட திரைப்படங்களும் ஆண்ட்ரியா நடிப்பில் வரிசையாக ரிலீஸாக காத்திருக்கின்றன.

மேலும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்திலும் பிரபல நடன இயக்குனர் பாபு ஆண்டனி இயக்குனராக களமிறங்கியிருக்கும் புதிய படத்திலும் நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார். இந்த வரிசையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் பிசாசு 2.

பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள பிசாசு 2 படத்திற்கு கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள பிசாசு 2 படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ரிலீஸாகவுள்ள பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை அஹிம்சா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Get your scares in @DirectorMysskin’s signature horror style on Aug 31! 😧#Pisasu2 entire overseas release (excl. Malaysia & Singapore) by #AhimsaEntertainment 🎞 @andrea_jeremiah @VijaySethuOffl @Rockfortent @RajkumarPitchu1 @kbsriram16 @PRO_Priya pic.twitter.com/9QxeYtKBE9

— Ahimsa Entertainment (@ahimsafilms) August 14, 2022