விஷால் நடித்த திமிரு மற்றும் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார். பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்டாவ காணோம்.

வேல்மதி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி லீட் ரோலில் நடித்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

படத்தின் டீஸரை தொடர்ந்து தற்போது ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீஸரில் விஜய்சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்தார். தற்போது ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தை JSK ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து லியோ விஷன் நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டே இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இந்த படம் OTT தளத்தில் வெளியாகிறது. 

அண்டாவ காணோம் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அது நிச்சயமாக காத்திருப்பின் பலனாக இருக்கும். அதன் கதை அபாரமானது. அது நாங்கள் உணர்ந்தவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று நம்புகிறோம் என ஸ்ரேயா ரெட்டி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.