பலகோடி தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் எழுதியுள்ளார். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டடிக்க, அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் அத்தனை ஸ்டண்ட் காட்சிகளும் விஜய்க்கு தகுந்தாற்போல ஸ்டைலாகவும் மாஸாகவும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்கள் இருவரும் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பீஸ்ட் திரைப்டத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக இந்த பேட்டியில் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்கேட்டிங் ஸ்டன்ட் காட்சி குறித்தும் பேசினர்.

அதில் தளபதி விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருக்கு முன் கூட்டி தெரிவிக்காமலேயே ஸ்ஸ்கேட்டிங் ஸ்டண்ட் காட்சிகளின் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டதாகவும், ஆனால் அதனைப் பார்த்து கொஞ்சமும் பதற்றப்படாத தளபதி விஜய் உடனடியாக அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு கொஞ்சம் கூட தவறின்றி  மிகச்சரியாக அனைத்து ஸ்கேட்டிங் ஸ்டண்ட் காட்சிகளையும் செய்ததாகவும் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் நடித்த மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக ஸ்கேட்டிங் செய்த விஜய் தற்போது மீண்டும் இதனை சரியாக செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர். பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் ஸ்டன்ட் காட்சிகள் குறித்தும் அன்பறிவு மாஸ்டர்கள் பேசிய வீடியோ இதோ…