பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரித்த படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. சமீபத்தில் வெளியான இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருந்தார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்திருந்தனர். 

anandhi anandhi

இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியிருந்தார். தரம் வாய்ந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

anandhi

டென்மா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது இந்த படத்திலிருந்து இருச்சி பாடல் வீடியோ வெளியானது. செந்தில் கணேஷ் பாடிய இந்த பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார்.