தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அம்மு அபிராமி இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி கடைசியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான நவரசா வெப்சீரிஸில் இன்மை எனும் எபிசோடில் நடித்திருந்தார்.தொடர்ந்து விரைவில் ரிலீஸாகவுள்ள யானை, கண்ணகி, நிறங்கள் மூன்று, கனவு மெய்ப்பட உள்ளிட்ட படங்களிலும் அம்மு அபிராமி நடித்துள்ளார். 

இதனிடையே தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் ,தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, இவன் வேற மாதிரி, ஒத்த செருப்பு, வினோதய சித்தம், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசை அமைப்பாளர் C.சத்யா இசையில் போகாதே ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் AK.தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள போகாதே பாடலை லவரதன் எழுத, ஸ்பேஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அம்மு அபிராமியின் போகாதே மியூசிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.