கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மன்.பவித்ரா கௌடா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.அமல்ஜித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ஜெனிஃபர்,அவினாஷ்,சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் புதிய பரிமாற்றதுடன் புதிய நடிகர்களை இணைத்து எடுத்து வருகின்றனர்.

பிரபல சீரியல் நடிகை நிவிஷா மற்றொரு நாயகியாக சமீபத்தில் இந்த தொடரில் இணைந்தார்.இந்த தொடர் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று வருகிறது.தற்போது இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து இந்த மைல்கல்லை தொடும் சில தமிழ் சீரியல் லிஸ்ட்களில் இணைந்துள்ளது.சீரியல் குழுவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.