சூர்யா நடிப்பில் இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் 2020 தீபாவளியை முன்னிட்டு அமேசான் ப்ரைம்மில் வெளியானது.

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் பல திரைப்பட விழாக்களில் பல சிறப்பு அங்கீகாரங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.பலரும் இந்த படத்தினை திரையரங்குகளில் மிஸ் செய்துவிட்டோமே என்று பெரிதும் ஏங்கி வந்தனர்.இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படம் அடுத்து ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

ஜீ வி பிரகாஷ் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது,தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸில் வரும் கையிலே ஆகாசம் பாடலை பாராட்டி ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு பதிவிட்டுள்ளார்,இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.