விஜய் டிவியில் கடந்த 2014-2017 வரை ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர் கல்யாணம் முதல் காதல் வரை.அமித் இந்த தொடரின் ஹீரோவாகவும்,ப்ரியா பவானி ஷங்கர் இந்த தொடரின் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் மூலம் அமித் மற்றும் ப்ரியா இருவரும் பிரபலன்களாக மாறினர்

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் கடந்த 2017-2019 வரை ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் அமித் ஹீரோவாக நடித்திருந்தார்.சரண்யா இந்த தொடரின் ஹீரோயினாக நடித்திருந்தார்.வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தவிர விஜய் டிவியின் மாப்பிள்ளை,சன் டிவியின் கண்மணி உள்ளிட்ட தொடர்களில் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார் அமித்.

தமிழ்,கன்னடம்,ஹிந்தி என்று பல மொழியின் முக்கிய படங்களான என்னை அறிந்தால்,2 ஸ்டேட்ஸ்,குற்றம் 23,மிருதன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் அமித்.மேலும் டப்பிங் கலைஞராகவும் சில படங்களிலும்,நிகழ்ச்சிகளும் இருந்துள்ளார்.மேலும் சில தொடர்களை தொகுத்து வழங்கியும் அசத்தியுள்ளார் அமித்.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஹிந்தியில் செம ஹிட் அடித்த Guddan Tumse NaHo Payega என்ற சீரியலின் தமிழ் ரீமேக்கில் அமித் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இந்த தொடர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் தொடர் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடர் சமீபத்தில் Hitler Gari Pellam என்ற பெயரில் சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பாகி நல்ல TRP-யை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.