தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் பிரபல நடிகராகவும் திகழும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ளது செல்ஃபி திரைப்படம். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஏப்ரல் 1ம் தேதி உலகெங்கும் திரைய‌ரங்க‌ளி‌ல் ரிலீஸாகவுள்ள செல்ஃபி படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் செல்ஃபி திரைப்படத்தை பார்வையிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 

நேற்று செல்ஃபி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தேன். நீட் தேர்வு & கட்டணங்கள் தொடர்பாக கல்லூரிகளில் நடைபெறும் ஊழல், தற்கொலைகள் மற்றும் கொலைகள் குறித்து மிகத் தைரியமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். ஜீவி பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அறிமுக நடிகர்-தயாரிப்பாளர் குணநிதி ஆகியோர் அசத்தியுள்ளனர்.  நான் பார்த்ததிலேயே ஜீவி பிரகாஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான சிறந்த திரைப்படம். அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படத்தை வழங்கிய இயக்குனர் மதிமாறனுக்கு எனது பாராட்டுக்கள். 

என திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்களின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…