தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அந்தவகையில் கடைசியாக ஹிந்தியில் முன்னணி கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்த ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அடுத்ததாக மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் ஆடுஜீவிதம் படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடிக்கிறார். ஆடுஜீவிதம் திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக அமலாபால் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கடாவர்.

அமலாபால் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அமலாபால் தயாரித்து நடிக்கும் கடாவர் திரைப்படத்தில் ரித்விகா பன்னீர்செல்வம், ரஞ்சின் ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனூப் S பணிக்கர் இயக்கத்தில் தயாராகும் கடாவர் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

அமலாபாலின் மிரட்டலான நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கடாவர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் கடாவர் திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…