மகளுக்கு இப்போதே நடனம் கற்றுத்தரும் ஆல்யா மானசா ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | August 10, 2020 13:25 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இவருக்கென்று ரசிகர்கள் பக்கங்கள்,வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.
இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவரும் இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.தனித்தனியாக ரசிகர் பக்கங்களை தாண்டி இருவருக்கும் சேர்த்து நிறைய ரசிகர் பக்கங்கள் உருவாகின.இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க இருவரும் நிஜத்திலும் ஜோடியாக மாறினர்.
இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.இந்து நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.
கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவழித்து வருகின்றனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.
ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்த ஆல்யா சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு சீரியலுக்கான டெஸ்ட் ஷூட் கலந்துகொண்டார்.ஆல்யா என்ன தொடரில் நடிக்கிறார்,அந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறாரா அல்லது கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாரா போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.இதற்கான விடையை விரைவில் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.
தற்போது மகளுடைய செம கியூட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆல்யா.செல்ல மகளுக்கு தற்போதே டான்ஸ் கற்றுக்கொடுப்பது போன்ற வீடீயோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Vanitha Vijayakumar demands a sum of Rs 2.5 crores from Lakshmy Ramakrishnan!
10/08/2020 01:45 PM
Vijay Sethupathi's debut Hindi film postponed by 1 year
10/08/2020 01:26 PM
Popular Tamil actor's emotional video statement from a government hospital
10/08/2020 12:41 PM
WOW: Radikaa Sarathkumar's legendary achievement! Wishes pour in!
10/08/2020 12:28 PM