ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஆல்யா மானஸா. சீரியல் உலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஷெண்பா எனும் பாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதே சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

AlyaManasa

கர்ப்பமாக இருந்த ஆல்யா மானஸாவிற்கு சில தினம் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் சீரியல் பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் செய்து வருகின்றனர். 

AlyaManasa

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராமில் சாப்பிடுவது போல் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை, எனக்காக நான் சாப்பிடுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். வெளிப்படையாக இருக்கும் ஆல்யவின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதையடுத்து அவரின் இப்பதிவு ட்ரெண்டாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I never mind where I am 😆 I eat for myself #loveeating

A post shared by Alya Manasa (@alya_manasa) on