புதிய சீரியலில் களமிறங்கிய ஆல்யா மானசா ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | August 30, 2020 12:13 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இவருக்கென்று ரசிகர்கள் பக்கங்கள்,வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.
இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவரும் இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.தனித்தனியாக ரசிகர் பக்கங்களை தாண்டி இருவருக்கும் சேர்த்து நிறைய ரசிகர் பக்கங்கள் உருவாகின.இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க இருவரும் நிஜத்திலும் ஜோடியாக மாறினர்.
இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.இந்து நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.
கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவழித்து வருகின்றனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.
ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்த ஆல்யா சில நாட்களுக்கு முன் விஜய் டிவி சீரியலில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.ஒரு சீரியலுக்கான டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது என்று சில புகைப்படங்களை பகிர்ந்த ஆல்யா தனக்கு பிடித்த இயக்குனர் பிரவீன் பென்னட் இதனை இயக்கியுள்ளார் என்றும் அவர் ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்துள்ளார்.
தற்போது ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு புதிய சீரியலின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டதாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய சீரியல் வெற்றி பெற கலாட்டா சார்பாக ஆல்யா மானசாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Just IN: Ratsasan team gets Losliya on board
30/08/2020 09:59 AM
SPB Charan's latest official update on SPB's health condition - check out!
29/08/2020 06:00 PM