தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன். சில நாட்களுக்கு முன்பாக காய்ச்சலின் சில அறிகுறிகள் தென்பட்டு கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அல்லு அர்ஜுன் பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 15 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருந்த அல்லு அர்ஜுன் நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் அதில்  கொரோனா இல்லை என்பது உறுதியானது.இதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் செய்தியை பகிர்ந்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

15 நாட்களுக்குப் பிறகு தனது குழந்தைகளை முதல் முறையாக பார்த்த அல்லு அர்ஜுன் குழந்தைகளை அரவணைத்து கட்டித் தழுவினார். குழந்தைகளும் அல்லு அர்ஜுனை கட்டித்தழுவி விளையாடி அன்பை வெளிப்படுத்தினர். 15 நாட்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் குழந்தைகளை சந்திக்கும் இந்த வீடியோவை தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அல்லு அர்ஜுனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக தினசரி தொலைக்காட்சி செய்திகளிலும்  சமூக வலைதளங்களிலும் நிறைய சினிமா பிரபலங்களும் விளையாட்டு, அரசியல் சார்ந்த பிரபலங்களும் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது  காணமுடிகிறது.அதில் பலர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வருகிறார்கள் ஒரு சிலர்  உயிரிழக்கிறார்கள்.