தென்னிந்திய திரை உலக ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் கதாநாயகனாகவும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. செம்மர கட்டை கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் பல மொழிகளிலும் மெகாஹிட் ஆனது.

புஷ்பா கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் அல்லு அர்ஜுன். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, வில்லனாக ஃபகத் பாசில் கவனத்தை ஈர்த்தார். மேலும் தனஞ்செய், சுனில், அனுசுயா பரத்வாஜ், அஜய் கோஷ், மைம் கோபி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் புஷ்பா திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கியுள்ளார். மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் மற்றும் ரூபன் இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள புஷ்பா திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற என்ற ஊ சொல்றியா ஊஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த மக்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ள இந்தப் பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பாடலின் புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. இப்பாடலின் நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ட்ரெண்டாகும்  அந்த மேக்கிங் வீடியோ இதோ…