சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் டாக்டர்.நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து நெல்சன் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.கிறிஸ்துமஸை ஒட்டி வெளியான இவரது புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியானது.இந்த படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.இந்த படத்தினை பல ரசிகர்களும் பிரபலங்கள் பாராட்டி வந்தனர்.புஷ்பா படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

புஷ்பா படத்தினை பார்த்த நெல்சன் அல்லு அர்ஜூனுக்கும் படக்குழுவுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.இதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுன் உங்களுக்கு படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி நான் டாக்டர் படம் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் சமீபத்தில் பார்த்ததில் சிறந்த படம் அதுதான் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் டாக்டர் படத்தினை பாராட்டியது இரண்டு திரையுலங்களுக்கு இருக்கும் நட்புறவை வலுவாக்கும் படி அமைந்தது.ஏற்கனவே புஷ்பா பட செய்தியாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயனின் நடனத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன் தற்போது படத்தினை புகழ்ந்து தள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.