தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மலை ஈட்டியது இந்த படம்.

Allu Arjun Emotional Tweet Son Ayaan Birthday Post

இதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Allu Arjun Emotional Tweet Son Ayaan Birthday Post

இன்று அல்லு அர்ஜுனின் மகன் அயானின் பிறந்தநாள்.இது குறித்து தனது ட்விட்டரில் மகனுக்காக உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார்.நீதான் என் வாழ்க்கையில் அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தாய் என்று மகன் குறித்து அல்லு அர்ஜுன் பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.