இந்திய சினிமாவில் இதுவரை எந்த கன்னட படமும் தொடாத மிகப்பெரிய உச்சத்தை தொட்டு பல்வேறு மொழி ரசிகர்களையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்ப வைத்தது கேஜிஎஃப் திரைப்படம். கே ஜி எஃப் திரைப்படத்தின் இமாலய வெற்றியை அடுத்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படமும் தயாராகி வெளிவந்தது.

HOMBALE ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட படமாக ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தை தொடர்ந்து தற்போது 2-வது வாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பக்கா மாஸ் திரைப்படமாக தயாராகியிருக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடிக்க ரவீனா டாண்டன் ஸ்ரீனிதி ஷெட்டி பிரகாஷ்ராஜ் மாளவிகா அவினாஷ் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் பவன் கௌடா ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை கண்டு ரசித்த பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர்கள் யஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், ரவீணா டாண்டன் மற்றும் படக்குழுவினரை பாராட்டிய அல்லு அர்ஜுனி வைரல் பதிவு இதோ…