தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மழை ஈட்டியது இந்த படம்.

Allu Arjun 20 Titled Pushpa Directed By Sukumar

இதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

Allu Arjun 20 Titled Pushpa Directed By Sukumar

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த  தயாரித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு புஷ்பா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.