தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான  நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கும் Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்து வந்தார்.

AlaVaikunthapurramuloo OMG Daddy Song Teaser

பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றனர்.தபு,சத்யராஜ்,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

AlaVaikunthapurramuloo OMG Daddy Song Teaser

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மூன்றாவது பாடலான OMG டாடி என்ற பாடலின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அல்லு அர்ஜுனின் குழந்தைகள் இடம்பெறும் இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.