மலையாளம் சினிமாவின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் டெல்னா டேவிஸ்.அடுத்ததாக சில தமிழ் படங்களில் நடித்து அசத்தினார் டெல்னா டேவிஸ்.குரங்கு பொம்மை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் டெல்னா.

அடுத்ததாக சில வருடங்கள் படிப்பிற்காக பிரேக் எடுத்த டெல்னா, சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார்.பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் டெல்னா.

இந்த தொடரில் விராட் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரேஷ்மா பசுபுலேட்டி,சங்கீதா,ப்ரீத்தா,ராகவ்,அக்ஷிதா அசோக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.200 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் சில வாரங்களுக்கு முன் பிரபல நடிகை அம்பிகா சிறப்பு தோற்றத்தில் இணைந்தார்.தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்த அக்ஷிதா அசோக் இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் விலகியுள்ளார் இவருக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார் இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

akshitha ashok quits anbe vaa serial sun tv delna davis viraat