பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் அக்ஷய் குமார் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 30 ஆண்டுகளை கடந்து விட்டார்.  கடைசியாக தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.O திரைப்படத்தில் பக்ஷிராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அட்டார்னி ரே மற்றும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூரியவன்ஷி ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

தமிழில் சூப்பர் ஹிட்டான சிறுத்தை திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ரவுடி ராத்தோர், துப்பாக்கி திரைப்படத்தின் ரீமேக்கான ஹாலிடே ,காஞ்சனா படத்தின் ரீமேக்கான லக்ஷ்மி உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ள அக்ஷய் குமாரின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பெல்பாட்டம்.

இயக்குனர் ரஞ்சித் M திவாரி இயக்கத்தில் தயாராகியுள்ள பெல்பாட்டம் திரைப்படத்தை பூஜா என்டர்டைன்மென்ட் மற்றும் எம்மே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் பெல்பாட்டம் திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள பெல்பாட்டம் திரைப்படம் 3D-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெல்பாட்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அக்ஷய் குமாரின் ஸ்டைலான பெல்பாட்டம் திரைப்படத்தின் டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.