ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் நடித்து வரும் திரைப்படம் அத்ரங்கி ரே. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி அசத்தியது. 

முன்பாக அத்ரங்கி ரே பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அங்குள்ள குரூப் டான்சர்களுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது. பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் காட்சியளித்தார் தனுஷ். இதனைத்தொடர்ந்து சில நாட்கள் முன்பு கேமராவுடன் தனுஷ் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

இப்படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியிருந்தார். நமக்கு கிடைத்த தகவலின் படி, அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

மதுரையில் நடைபெற்று வந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார். படத்தின் நாயகி சாரா அலி கானுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளி விருந்தாய் லக்ஷ்மி பாம் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து பெல் பாட்டம் படத்தில் நடித்து முடித்தார். தற்போது அத்ரங்கி ரே படத்தில் இணைந்துள்ளார்   

சமீபத்தில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். படத்தின் பாடல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இசைப்புயல். 

படப்பிடிப்பு பணிகள் வேகமெடுப்பதால் விரைவில் படம் தொடர்பான அப்டேட்டுகள் குவியும் என்ற ஆவலில் உள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். தனுஷ் நடிப்பதால் நிச்சயம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஞ்சனா திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)