பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார் நடிக்கும் திரைப்படம் பெல் பாட்டம். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் தலைவாசல் விஜய்யும் நடிக்கிறார். இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கியுள்ளது. முறையான பாதுகாப்புடன் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

பியர் கிரில்ஸ் நடத்தி வரும் Into the Wild நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் அவருக்கும் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் கூட பங்கேற்று வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் பங்கேற்றது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து தற்போது நடிகர் அக்ஷய் குமார் Into the Wild நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 

அதன் டீஸர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. இந்த டீஸரை வெளியிட்ட அக்ஷய் குமார், பியர் க்ரில்ஸ் உடன் IntoTheWild நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அதில் அதிக சவால்கள் இருக்கும் என நான் நினைத்தது தான். ஆனால் பியர் கிரில்ஸ் என்னைக்கு யானை சாணியில் டீ போட்டு கொடுத்து என்னை சர்ப்ரைஸ் ஆக்கி விட்டார். என்ன ஒரு நாள் இது...என அக்ஷய் பதிவு செய்துள்ளார்.

Into the Wild டீஸரில் அக்ஷய் குமாரை மட்டும் யானை சாணத்தில் செய்த டீயை குடிக்க வைத்து விட்டு, பியர் க்ரில்ஸ் அதை குடிக்காமல் அவரை ஏமாற்றிவிட்டு அதை கீழே ஊற்றுகிறார். அதுவும் டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது. நான் ரீல் ஹீரோ, அவர் ரியல் ஹீரோ என அக்ஷய் குமார் பியர் க்ரில்ஸ் பற்றி பேசுகிறார். அதன் பிறகு அவர்கள் காட்டுப் பகுதிக்குள் செல்கிறார்கள். அங்கு தான் யானை சாணத்தை கொண்டு டீ போடுகிறார் பியர் க்ரில்ஸ். 

மேலும் முதலைகள் நிறைந்த ஆற்றை அவர்கள் கடக்கிறார்கள். ராணுவத்தினர் போல கயிற்றில் ஏறுவது போன்ற பல விஷயங்களை அவர்கள் செய்துள்ளனர். இந்த adventureஐ நான் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என அக்ஷய் குமார் தெரிவிக்கிறார்.

அதோடு அந்த நிகழ்ச்சியின் டீஸர் முடிவுக்கு வருகிறது.அக்ஷய் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியின் காட்சிகள் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலி சரணாலயத்தில் தான் எடுக்கப்பட்டு உள்ளது. அது ஷூட் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது தான் ஒளிபரப்பப்பட்டுள்ளது.