விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Ajith Valimai Prasanna Confirms Not Being A Part

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Ajith Valimai Prasanna Confirms Not Being A Part

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

Ajith Valimai Prasanna Confirms Not Being A Part

இதுகுறித்து பிரசன்னா தற்போது ட்விட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அஜித்துடன் நடிக்கவேண்டும் என்று பேச்சுவார்த்தைகள் நடந்தது உண்மைதான் ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை.இருந்தாலும் எப்போதும் அடுத்த வாய்ப்பு இருக்கிறது விரைவில் அஜித்துடன் நடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.