தல அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்த சிறப்பு தகவல் !
By | Galatta | November 20, 2020 19:01 PM IST

சினிமா துறையில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது.
தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. படக்குழு தரப்பில் இருந்து வலிமை படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் துவங்கியது. அங்கு அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. பிரபல நாளிதழின் பேட்டி ஒன்றில் பேசிய வலிமை பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் தீம் மியூசிக் குறித்து பேசியிருந்தார். அதாவது கிட்டார் பயன் படுத்தாமல் படத்தின் பின்னணி இசையை கம்போஸ் செய்ததாக கூறினார்.
வலிமை படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்று தினமும் தல ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் தல அஜித்திற்கு வலிமை படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுவிட்டது என்றும், இதனால் வலிமை படப்பிடிப்பு நின்று விட்டது என்றும் வதந்திகள் இணையத்தில் கிளம்பியது. காட்டுத்தீ போல் பரவிய இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது கலாட்டா குழு.
இதுகுறித்து விசாரிக்கையில், வலிமை படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டது உண்மை தான். சிறிய காயம் தானாம் அது. காயத்தை பொருட்படுத்தாமல் அன்றே ஒரு சூப்பரான சீனை படமாக்கி முடித்தாராம் அஜித். ஹைதராபாத்தில் நடந்து வந்த அந்த படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்தது என்ற புதிய செய்தியும் கிடைத்துள்ளது. அந்த schedule-ஐ முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பிய செய்தியும் தெரியவந்துள்ளது. அப்டேட் குறித்து கேட்டு வந்த தல ரசிகர்களுக்கு இந்த தகவலை கூறுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.
Friendship song from Jiiva - Arulnithi's Kalathil Sandhippom - watch video here!
20/11/2020 06:18 PM
Important clarification on Salman Khan's Radhe OTT release rumours | Prabhu Deva
20/11/2020 05:34 PM