தமிழில் சதுரங்க வேட்டை படத்தின் முலம் அறிமுகமாகி தீரன் அதிகாரம் 1 திரைப்படத்தின் முலம் தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் இயக்குனராக வளர்ந்தவர் இயக்குனர் H.வினோத். அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் அஜித்குமாரின் இணைந்த இயக்குனர் H.வினோத் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

தற்போது மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்திருக்கும் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நீண்ட நாட்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்று சர்ப்ரைஸ் அப்டேட்-ஆக வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 

தல அஜித்தின் மாஸ் ஆன கெட்டப்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை. வெளியிட்டுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் பே பியூ பிராஜக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்க, நடிகர் கார்த்திகேயா, பாணி, சுமித்ரா, ராஜ் ஐயப்பா, குக்கு வித்து கோமாளி புகழ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் வலிமை படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். கே.கதிர் கலை இயக்குனராகவும், அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர் என தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.