தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

துணிவு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா,சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.செம மாஸான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.