தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கிற்கு இடையே அஜித் ஒரு வெளிநாட்டு ட்ரிப் சென்றிருந்தார்.அங்கிருந்து இவரது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தன.

கடந்த சில வாரங்களாக தனது விடுமுறையை என்ஜாய் செய்து வந்த அஜித்.இன்று காலை சென்னை திரும்பியுள்ளார் இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.விரைவில் இவர் AK 61 ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.