தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் மாஸ் ஹீரோவாகவும் வலம் வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் இணைந்து நடித்த வலிமை திரைப்படம் அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடையே 3-வது முறையாக இயக்குனர் வினோத் அஜித்குமார் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் துணிவு.

தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி & ராஜதந்திரம் வீரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கும் துணிவு படத்திற்கு விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்குமார் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

FRONT View - Thala AJITH With Long Beard 💥👌Shooting Spot.#Thunivu | #AjithKumar | #NoGutsNoGlory. pic.twitter.com/9gfJlOZpXv

— Ajith UK Fans (@AjithUKFans) October 21, 2022