தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகராக ஜொலிக்கும் அஜித் குமார் அவர்கள் பலகோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக அஜித் குமார்-H.வினோத்-போனிகபூர்-நீரவ் ஷா கூட்டணியில் #AK61 திரைப்படம் தயாராகி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட #AK61 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 

முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் தனது பைக் ரைடிங்கை முடித்த அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய நிலையில், தற்போது திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் பங்கேற்றுள்ளார். திருச்சி ரைஃபிள் கிளப்பில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட அஜித்குமாரின் வீடியோக்கள் நேற்று (ஜூலை 27) வெளியாகின. 

திருச்சி ரைஃபிள் கிளப்பில் அஜித் குமாரை சந்திப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து அஜித் குமார் நேற்று ரசிகர்களை சந்தித்து, கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் இரவு திருச்சி ரைஃபிள் கிளப்பில் இருந்து வெளியேறும் போதும் ரசிகர்களை அஜித்குமார் சந்தித்தார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வீடியோக்கள் இதோ…