தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.நடிகர் ஆதியுடன் அஜித் இருக்கும் இந்த புகைப்படம் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இவர் இந்த படத்தில் நடிக்கிறாரா இல்லை சாதாரண சந்திப்பு தானா என்பது  தெரியவில்லை என்றாலும் செம ஸ்மார்ட்டாக அஜித் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.